Skills for Inclusive Growth இற்கு உங்களை வரவேற்கின்றோம்


Skills for Inclusive Growth திட்டத்தினை ஆஸ்திரேலிய அரசாங்கமானது இலங்கையின் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது

இத்திட்டத்தின் மூலம் இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும், திறன் அபிவிருத்திப் பயிற்சிகளை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குமான உதவிகள் வழங்கப்படுகின்றன

நாம் செயற்படும் துறைகள்

அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுதல்

திறன் இடைவெளிகளை அடையாளம் கண்டு திறன் அபிவிருத்திப் பயிற்சியளித்தல்

சுற்றுலாத்துறை மதிப்புச் சங்கிலியில் தற்போதுள்ள தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல்

பெண்கள் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான நிலைபேறான தொழில்வாய்ப்புகளுக்கு முன்னுரிமையளித்தல்

Skills for Inclusive Growth திட்டம் தொடர்பான காணொளிகள்

S4IG MIS Portal – Live Data